Sunday, May 1, 2011

ராமதாசர் - அவருடைய ஒரு சிறிய அனுபவம்




இவர் சிவாஜியின் ( மராட்டிய அரசர் ) குரு . சிவாஜிக்கு ராம பக்தி உண்டாவதற்கு இவர் தான் காரணம் . சிவாஜி ராமதாசரை தம்முடைய தெய்வமாக கருதினார் .

ராமதாசரை பற்றியும் அவருடைய ஒரு சிறிய அனுபவம் பற்றியும் கீழ் காணுவோம் :

ராமதாசர் சூர்யாஜி மற்றும் இராணு - பாய் என்பவர்களுக்கு மகனாய் ராம நவமி அன்றைக்கு ஜல்னா ( மகாராஷ்டிரா ) என்னும் ஊரில் 1530 - இல் ஒரு பிராமன குடும்பத்தில் பிறந்தார் . அவருடைய பெயர் நாராயண் .
சிறுவயதிலேயே ராமரிடம் பக்தி கொண்ட காரணத்தினால் அவர் பெயரை ராமதாசர் என மாற்றிக்கொண்டார் . { ( ராம ) ( தாசர் - பக்தர் அல்லது அடியேன் ) ( ராமரின் பக்தர் அல்லது அடியார் ) }

ராமதாசர் , ஒரு முறை வழக்கம் போல பல வீடுகளில் பிக்ஷை வாங்கிக்கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றார் . அங்கே ஒரு ஒரு பெண் வாசலில் சாணி தெளித்துகொண்டிருந்தார் . இவரை பார்த்தவுடன் அந்தப் பெண் சாணி துடைத்துகொண்டிருந்த துணியை இவர் மேல் வீசினார் . இதனால் ராமதாசர் கோபப்படாமல் அந்தத் துணியை எடுத்துக் கொண்டு வந்து தனது ஆசிரமத்தில் அதை அழுக்கு போகக் கழுவினார் . பிறகு அந்தத் துணியில் இருந்த நூல்களை பிரித்து திரியாக்கி அதை இறைவனுக்கு முன் தீபமாக ஏற்றி இறைவனிடம் " அந்த பெண்ணுக்கு என்ன குறையோ தெரியவில்லை , நீ கருணை கூர்ந்து அதை நீக்கிவிடு " என்றார் .


இவ்வாறு தன்னை அவமதித்து அனுப்பிய பெண்ணுக்கு நல்வழிக்காட்ட இறைவனுக்கு பிரார்த்தித்த ராமதாசர் இன்னும் பலர் மனங்களில் அணையா தீபமாக இருக்கிறார் .

No comments:

Post a Comment